மண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் !
Tuesday, June 12th, 2018
இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாயாக குறைப்பதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததாலும், பஸ், லொறிகளுக்கு மண்ணெண்ணெய்யை பயன்படுத்தியதாலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், குறைந்த வருமானம் உடைய மக்களையும், கடற்றொழிலாளர்களையும் கருத்திற்கொண்டு, விலைக் குறைப்பை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Related posts:
அரசியல் அமைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை- லால் விஜேநாயக்க!
ஆசிரியரின் வீட்டில் தங்கச் சங்கிலி, பணம் என்பவற்றை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள்!
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 வீதம் உயர்வு.
|
|
|


