அரசியல் அமைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை- லால் விஜேநாயக்க!

Tuesday, September 13th, 2016

புதிய அரசியல் அமைப்பின் எந்தவொரு சரத்து பற்றியும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என, அரசிலய் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் எந்தவொரு சரத்தும் இறுதியாக்கப்படவில்லை.

பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகள் ஆராயப்பட்டு பரிந்துரைகள் முன்வைக்கும் பணிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய அரசியல் அமைப்பின் எந்தவொரு விடயம் பற்றியும் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நோக்கில் நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றம் செய்துள்ளதுடன் பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய துறைகள் தொடர்பில் ஆறு பிரதான குழுக்கள் ஊடாக ஆராயப்படுகின்றது.பொதுமக்கள் பிரதிநிதிகளின் தலைமையிலான இந்த ஆறு குழுக்களில் ஐந்து குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவின் அறிக்கை நேற்று வரையில் கிடைக்கவில்லை.

இந்த அறிக்கைகள் அனைத்தும் கிடைக்கப் பெற்றவுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக விரிவாக பேசப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

3

Related posts: