மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – இரா .செல்வவடிவேல்!

Tuesday, July 31st, 2018

சபையின் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே. அந்தவகையில் உறுப்பினர் ஒவ்வொருவரும் வெவ்வேறான கட்சிகளாக இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் மக்களுக்கானதாகவே இருக்கவேண்டும். மக்கள் சேவைக்காக உழைக்கும் இந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான அதிகாரங்கள் உண்டு. இதில் பாரபட்சங்கள் இருப்பதையும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துவதையும் ஏற்கமுடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் சபை அமர்வு இன்றையதினம் சபையின் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ் மாநகர  சபையின் 45 உறுப்பினர்களும் தத்தமது மக்கள் பணிகளை செய்ய சம உரிமை உடையவர்கள். அதனால் இங்கு பகிரப்படும் வேலைத்திட்டங்களானாலும் சரி நிதிப்பங்கீடானாலும் சரி சம அளவில் பகிரப்பட்டு ஒவ்வொரு உறுப்பினரும் தமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட வேண்டும்.

மாறாக தத்தமது அதிகாரங்களை கையாண்டு பாரபட்சங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மேற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுத்தால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மட்டுமல்லாது எந்தவொரு திட்டத்தையும் சரியான முறையில் மக்களிடம் கொண்டுசெல்ல முடியாத நிலை உருவாகும்.

அந்தவகையில் மக்கள் சேவைக்காக உழைக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு பாரபட்சங்கள் அற்றவகையில் ஒன்றுபட்டு மக்கள் சேவையை செய்ய இந்த மாநகர சபை உழைக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: