மக்கள் சமர்ப்பித்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு!

இம்முறை வரவுசெலவுத் திட்டத்திற்குள் பொது மக்கள் சமர்ப்பித்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டிருப்பதாக ஊடகத்துறை மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எலெக்ரிக் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகை ஒருவருடம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர கூறினார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றினார்.
அரசாங்கம் திறமையான இளைஞர்களைவ வலுவூட்டுவதற்கான யோசனைகளையும் சமர்ப்பித்திருக்கின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சிறுபிள்ளைகளைப் போன்று நாட்டிற்கும் நகைச்சுவையான செய்திகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2012ஆம் ஆண்டில் விவாகம் மற்றும் விகாரத்திற்கான பதிவுக் கட்டணத்தை அன்றைய நிதியமைச்சர் அதிகரித்தார். முழு நாட்டையும் ஆபத்தில் தள்ளும் வரவுசெலவுத் திட்டம் அன்று சமர்ப்பிக்கப்பட்டது. என்றும் அமைச்சா குறிப்பிட்டார்.
எலெக்ரிக் கார்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகை ஒருவருடம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும். அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்கும்போது நாடு பாரிய அளவில் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது.;. சவால்களை வெற்றிகொண்டு அரசாங்கம் முன்னோக்கிச் செல்கிறது. அடிப்படை நிதி முகாமைத்துவத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தால் முடிந்துள்ளது என்றும் ஊடகத்துறை மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர தமது உரையில் மேலும் கூறினார்.
Related posts:
|
|