மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை மகிந்த வேட்பாளராக நிறுத்துவார் – நாமல் ராஜபக்ச!

மக்கள் எதிர்பார்க்கும் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அக்குரெஸ்ஸ தொகுதியின் அதிகாரசபை கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் எதிர்பார்க்கும் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கை இணைக்க கூடிய தலைவர் ஒருவரை கட்சியின் வேட்பாளராக அடுத்த மாதம் 11ஆம் திகதி அறிவிப்போம்.
முடங்கி போன நிலமாக மாற்றப்பட்டுள்ள தாய் நாட்டை மீண்டும் தொழில் பூமியாக மாற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- நீர்வள சபை கட்டிட திறப்பு விழா நிக...
கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முற்றுப்புள்ளி!
தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம் – மக்கள் முண்டியடிப்பு!
|
|