யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- நீர்வள சபை கட்டிட திறப்பு விழா நிகழ்வில் ஈ.பி.டி.பி.வலியுறுத்து!

Thursday, May 19th, 2016

இலங்கை நீர்வள சபையின் வடக்குமாகாண  அலுவலகம் இன்று பழைய பிரதேச செயலக கட்டிடம், பிரதான வீதி என்னும் முகவரியில் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ  அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால்; திறந்துவைக்கப்பட்;டது.

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  சார்பில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கலந்து நிகழ்வை சிறப்பித்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில்  –

தற்போது யாழ்.மாவட்டம் குடிநீருக்கான ஒரு பாரிய பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றது. எமது மக்கள் எதிர்கொண்டுவரும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு படிக்கல்லாகவே இன்று திறக்கப்பட்டுள்ள இந்த நீர்வழங்கல் சபை அமையும் என எதிர்பார்க்கின்றோம்.

மேலும் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுற்றமைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் தீவுப்பகுதியில் காணப்படுகின்ற குடிநீருக்கான பிரச்சினையை சீர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் குடாநாட்டில் தூர்வடைந்து கிடக்கும் குளங்கள் கேணிகள் ஆகியவற்றை மீள் புனரமைப்பு செய்து மழை நீரை தேக்கிவைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர்

கடந்த காலத்தில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டுவந்த கடல் அணைகள் அமைக்கும் செயற்றிட்டங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால்; பல குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அந்த திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

01

1

4

9

2

 

Related posts: