மக்களை மறந்தமையினால்தான் ஐ.தே.க.வுக்கு இத்தகைய பரிதாப நிலை ஏற்பட்டது – அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டு!

Saturday, September 5th, 2020

மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தகைய பரிதாப நிலைமை ஏற்பட்டிருக்காதென அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் – “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது.

அந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களினால் மக்கள் தற்போது ஈர்க்கப்பட்டுள்ளனர். ஆகவே குறைந்தது எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே தொடர்ந்து நிலவும்.

இதேவேளை இதற்கு முன்னர் ஆட்சிசெய்த நல்லாட்சி அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இத்தகைய நிலைமை தற்போது ஏற்பட்டிருக்காது.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு ஒரு வேலையேனும் வழங்கத் தவறிவிட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: