ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலைமுதல் நீக்கப்படுகின்றது மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, October 22nd, 2021

இலங்கையில்   கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 31 ஆதம் திகதியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்டை எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 4.00 முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான   ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் இன்று நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தளர்வு சுகாதார கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அமுலில் இருக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஒக்டோபர் 25 க்குப் பின் ரயில் சேவைகளும் மாகாணங்களுக்கிடையே தொடங்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராண...
40 சதவீத அரச ஊழியர்கள் பணி நேரத்தை வீணடிப்பு செய்கின்றனர் - நிதி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடு...
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்...