மக்களை பாதுகாப்பது யார்? – இராணுவப் பேச்சாளர்!

Thursday, June 9th, 2016

வடபகுதியிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அங்குள்ள மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர கேள்வி எழுப்பினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நானும் அந்த செய்தியை பார்த்தேன். இங்கு ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும். அதாவது இராணுவத்தினர் மக்களுக்கு சேவையாற்றும் போது இனம் மதம் பார்ப்பதில்லை. யார் ஆபத்து சந்தித்துள்ளனரோ அவர்களை பாதுகாப்பதே எமது பொறுப்பாகும்.

உதாரணமாக அரநாயக்கவில் அனர்த்தம் ஏற்பட்டபோது கேகாலை மாவட்டத்தில் இராணுவ முகாம் இருந்ததால் மீட்பு பணிகளை முன்னெடுத்து மக்களை காப்பாற்றினோம்.

எனவே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அங்கு மக்களுக்கு ஏதாவது இடர் ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டாலோ யார் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது? மக்களின் பாதுகாப்புக்காகவே நாங்கள் செயற்படுகின்றோம் என்றார்.

Related posts: