பகிடிவதை தொடர்பில் 300 முறைப்பாடுகள் – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!

Saturday, July 28th, 2018

இலங்கையில் கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கமளிக்கப் பட்டுள்ளது என்று அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கடந்த நாள்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்றும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: