புலனாய்வாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – அஸ்கிரிய பீடம் !

Thursday, April 25th, 2019

தேசிய தேவையை கருத்திற்கொண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மகாநாயக்கர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் செயலாளர் வணக்கத்துக்குரிய மெதகம தம்மாநந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ முரண்பாடாகவோ அல்லது உலக தீவிரவாதமோகவோ அர்த்தப்படுத்தல்களை வழங்கி, புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதைவிடுத்து, நாட்டுக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

இதற்காக, அரசியல் கட்சிகள் பேதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாவனெல்லையில் புத்தரின் சிலையை சேதப்படுத்திய அடிப்படைவாதிகளை எந்த விசாரணையும் இன்றி விடுவிக்க அரசியல்வாதிகள் செயற்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.

இந்த நிலையில், தேசிய தேவையை கருத்திற்கொண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மகாநாயக்கர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Related posts:

ஆரம்ப கல்வியை மேம்படுத்த 50,000 உதவி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்த...
சமூகத்தொற்று தொடர்பில் விழிப்பாக செயற்படுங்கள் - யாழ் மாவட்ட மக்களிடம் அரச அதிபர் அவசர வேண்டுகோள்!
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் - பொலிஸ் ஊடக பேச்ச...