மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
Saturday, August 7th, 2021
இலங்கை, மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் கலாநிதி போதாகம சந்திம தேரருக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, இரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவை கண்காணிக்க உதவும் 300 துடிப்பு ஒக்சி மீட்டர்கள் சந்திம தேரரால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டன.
இதேவேளை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பூசி ஏற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை போதாகம சந்திம தேரர் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


