வைத்தியசாலை ஊழியர்போல் மோட்டார் சைக்கிளில் மருத்துவ குறியீடு பொறித்து ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய பெண் கைது!
Thursday, June 11th, 2020
வைத்தியசாலை ஊழியர்போல் மோட்டார் சைக்கிளில் மருத்துவ குறியீடு பொறித்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய பெண் யாழ். அரியாலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடாத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியமான நபர் சிறையில் உள்ளதாகவும் அவரே இவற்றை வழிநடத்துவதாகவும் கூறப்படுகின்றது.
Related posts:
சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!
கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை!
எரிசக்தி துறையுடன் இணைக்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையா...
|
|
|


