பாடசாலைகளில் பிற நாட்டு மொழிகளை கற்பிக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, October 29th, 2019

அரச பாடசாலைகளில் பிற நாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கமைய, 729 ஆசிரியர்கள் சேவைக்கு இணைக்கப்படவுள்ளனர்.

குறித்த ஆசிரியர்கள் பிற நாட்டு மொழிகள் கற்பிக்கும் வகையில் தெரிவு செய்யப்படும் பாடசாலைகளில் தரம் 10, 11 மற்றும் உயர்தர வகுப்புக்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பாடத்திட்டத்தின் ஊடாக பிரெஞ்சு, ஜேர்மன், ஹிந்தி, ஜப்பான், அரபு மற்றும் கொரிய மொழிகள் ஆகியன கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: