மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இவ் அமைச்சுக் கிடைத்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் – அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவிப்பு!

Thursday, November 1st, 2018

மக்களுக்காக தன்மை அர்ப்பணித்த மிகவும் திறமையான ஓர் அமைச்சரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சுக் கிடைத்தமை பாதிக்கப்பட்ட மக்களின் அதிர்ஷ்டம் என  குறித்த அமைச்சின் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளர் திரு. வி.சிவஞானசோதி அவர்கள் அமைச்சில் இன்று (01) தனது கடமைகளை ஆரம்பித்தார்.  தனது கடமைகளை ஆரம்பித்தபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களைக் கட்டியெழுப்புவதற்காக உருவாக்கப்பட்ட இவ்வமைச்சிற்கு பாரியதொரு பகுதி வேலைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சின் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பும் செயல் முனைப்பும் இன்றியமையாததாகும்.

அத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவது போன்றே அவற்றிற்கான பெறுபேறுகளும் இருக்க வேண்டும் என்பதுடன் கலந்துரையாடலை விட பெறுபேறுகளே மிகவும் முக்கியமானவை. நாட்டு மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்பு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருப்பதால், அவ்வாறு சேவையாற்றும்போது நேர்மையாகவும் பணிவாகவும் சேவையாற்றுவதற்கு அவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வாழ்த்துச் செய்தியை ஊடக செயலாளர் திரு. நெல்சன் எஸ். எதிரிசிங்க அவர்கள் இங்கு முன்வைத்தார்.
அமைச்சின் மேலதிக செயலாளர்களான எஸ்.பாஸ்கரன், பி.செந்தில்நந்தனன் ஆகியோரும் கௌரவ அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு. கே.தயானந்தா அவர்கள் உள்ளிட்ட பல உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த கீர்த்திமிக்க ஓர் அதிகாரியான திரு. வி.சிவஞானசோதி அவர்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களில் செயலாளர் பதவி வகித்தவராவார். இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி செயலணியின் செயலாளராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

4T2A7792 4T2A7799 4T2A7803

Related posts:

நியாயம் கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும் -  யாழ்.நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் தேரிவிப்பு!
தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உட...
மாசி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - 7 இலட்சத்து 47 ஆயிரத்து ...

இரண்டாவது நிலக்கரி சரக்குக்கான முற்பணமும் செலுத்தப்பட்டது - பெட்ரோல் இறக்கும் பணிகளும் ஆரம்பம் - எரி...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம் -...
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன - அரச மருந்த...