மக்களின் வரிப் பணத்தில் கட்சி விடயங்களை பேசி விவாதங்களை நடத்துவதற்கு அனுமதிக்கமுடியாது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, August 16th, 2016

வடக்கு மாகாணசபை என்பது தனி ஒரு கட்சியின் தாளத்துக்கு ஆடும் அரங்காக  இருப்பதற்கு உருவாக்கப்படவில்லை. அது வடபகுதி மக்களது வாழ்வியல் தேடலுக்கான களமாகவும் மக்களது எதிர்கால தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுப்பதற்காகவும் பல ஆயிரம் உயிர்களை முதலீடாக கொடுத்து பெறப்பட்ட உரிமமாகும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வைத்தியநாதன் தவநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை அமைச்சர்களது முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட விசாரணை குழு தொடர்பான இரண்டாவது அமர்வு இன்றையதினம் (16) சபையில் விவாதத்திற்’கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் சபையில் உரையாற்றும்போது தமது தமிழ் தேசிய கூட்டமைப்ப கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக நீண்டநேரம் உரையாற்றி கட்சி தொடர்பான பிரச்சார மேடையாக அவையை பயன்படுத்திக்கொண்ருந்த நிலையில் அவரது கருத்தக்கள் இந்த அவைக்கு புறம்பானது என தனது ஆட்சேபனையை அவைத்தலைவருக்கு தெரிவித்து ஒழுக்காற்று பிரச்சனையாக இதனை தெரிவிப்பதாக தவநாதன் தெரிவித்திருந்தார்.

இதற்கு அவைத்தலைவர் ஆர்னோல்ட்  சார்பாக கருத்தக்களை தெரிவித்திருந்தார். அவைத்தலைவரது கருத்தை எற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த தவநாதன் அப்படியானால் நானும் எனது ஈழமக்கள் நனநாயக கட்சியினால் கடந்த காலத்தில் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பெரும்பணிகள் மற்றும் கட்டுமாணங்கள் அரசியல் நகர்வுகள் தொடர்பாக எவரது இடையூறுகளும் இன்றி உரையாற்ற இடமளிக்கப்பட வேண்டும். அதற்கு சம்மதமென்றால் அவர் தனது கட்சி பிரச்சாரத்தை தொடரட்டும். அல்லது நாம் வெளிநடப்பு செய்ய வேண்டி நேரிடும் என கடுந்தொனியில் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் சிவஞானம் தனிப்பட்ட கட்சி தொடர்பான பிரச்சாரமாக கருத்து தெரிவிக்காது விவாதிக்கப்படும் விடயம் தொடர்பாக உரையாற்றும்படி ஆர்னோல்டிடம் வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரச்சார அவையாக மாறியிருந்த அவையை பளைய நிலையான பிரேரணை நிறைவேற்றும் அவையாக கொண்டுவந்தார்.

Related posts: