மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கைத் தீர்மானங்கள் உரிய முறையில் செயற்படுத்தாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணம் – சாகல சுட்டிக்காட்டு..!

Wednesday, July 19th, 2023

ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வசும” சமூக நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்கேற்பு இன்றியமையாதது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வலுவூட்டல் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல். குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கைத் தீர்மானங்கள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அந்த கொள்கைத் தீர்மானங்களை உரிய முறையில் எடுக்கத் தவறியதன் காரணமாகவே நாடு கடந்த காலங்களில் பல பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

“அஸ்வசும” சமூக நலன்புரி உதவித் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் தீவிர பங்கேற்பு தொடர்பில் நேற்று (18) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே திரு.சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அஸ்வசும” சமூக நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவு திட்டத்தின் இதுவரையான முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறுநீரகம், ஊனமுற்றோர் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளுக்காக பதிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் அந்த நன்மைகளை வழங்குமாறு சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அமுல்படுத்தப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் அமுலாக்கத்தில் பயனாளிகளை அடையாளப்படுத்துவதை முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிய இத்திட்டத்தில் இருந்து விலகிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் “அஸ்வசும” நிகழ்ச்சிக்காக இதுவரை கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தீர்த்து தகுதியானவர்களை அடையாளம் காணும் பணியை துரிதப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வேலைத்திட்டத்தை சரியான நேரத்தில் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுளளமை குறிப்பிடத்தக்கது

.

000

Related posts: