மக்களின் மீது இனி நேரடி வரி – நிதியமைச்சர்!

Monday, June 26th, 2017

மக்களின் மீது நேரடி வரியை சுமத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்து உபபீடாதிபரியை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

தற்போதைய அரசு ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது 17 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. இந்தத் தீர்மானத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது அதிகமான விடயங்களில் மக்கள் மீது மறைமுக வரியே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தமுறை இனி வரம் காலங்களில் நேரடி வரிமுறை என்ற வகையில் அறிமுகம் செய்யப்படும் என்றார்.

Related posts:

சீனாவின் வளர்ச்சிப்பாதை போன்று இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ...
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இராணுவத் தளபதி விளக்கம்!
யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மனித உரிமை விசாரணை குழு ஆணையாளராக ஜனாதிபதியால் நிய...