மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி: இன்று கேப்பாபிலவு காணிவிடுவிப்பு!

விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி குறித்த காணிகள் நாளை காலை 11 மணியளவில் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பகுதியில் இன்று காலை படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகியிருந்தது.
இதேவேளை, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றுடன் 30 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி அதிரடி முடிவு: அதி முக்கிய பணிப்பாளர் சபைகள் கலைப்பு!
இந்து ஆலயங்களில் மிருகபலி - வெளியாகவுள்ளது மேன்முறையீட்டு தீர்ப்பு !
போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அதிரடியான திட்டங்கள் தயார் - வடக்கு ஆளுநர் அறிவிப்பு!
|
|