மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாது – வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் – ஈ.பி.டி.பியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை தலைவர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Thursday, August 13th, 2020

மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாமல் எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும் என்பதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையை ஏற்று எமது கட்சிக்கு வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருந்தகைகளுக்கும் கட்சியின் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும்  ஊர்காவற்றுறை பிரதேச சயைின் தவிசாளருமான மருதயினார் ஜெயகாந்தன் (காந்தன்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பிரவேசத்துக்கு முதன்முதலாக மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்ப தூண்டுகோலாக இருந்த ஊர்காவற்றுறை தொகுதி 1994 ஆம் ஆண்டு நாட்டில் வன்செயல் அதிகரித்திருந்த நேரம் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது கொண்ட நம்பிக்கை காரணமாக நாடாளுமன்ற படியேற்றியது.

தொடர்ந்தும் சுமார் 27 ஆண்டுகளாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவுசெய்யப்பட்டு சேவையாற்றிவருகின்றார்.

அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் எமது கட்சிக்கு கடந்த தேர்தலை விட வாக்கு வீதத்திலும் விருப்பு வாக்கு வீதத்திலும் அதிக வாக்ககளை மக்கள் வழங்கியுள்ளனர்.

அந்தவகையில் எம்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாமல் எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும் என்பதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையை ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும், கட்சியின் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


சத்தியமூர்த்தி நியமனம் - மாகாணசபை அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்கும் செயற்பாடு – வடக்கின் முன்னாள் ...
புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்க...
14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளது -பதில் நிதியமைச்சர் ரஞ...