மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!
Thursday, February 3rd, 2022
பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்வரை தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், தான் பதவியை இராஜினாமா செய்வேன் என இராஜாங்க அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் நேற்று இரவு பொலிஸில் சரணடைந்தமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


