அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது !

Friday, November 23rd, 2018

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு  எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என சமகால அரசாங்கம் அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பித்துள்ளதன் மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை சம்பள பிரச்சினை ஏற்பட வாய்ப்பும் இல்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை தடை செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள யோசனையில் எவ்வித அர்த்தமும் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவினால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம் 2019ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கு அரச சேவையை தொடர்ந்தும் நடத்தி செல்ல முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடையில் தேர்தல் ஒன்று நடந்தால் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

ஜனாதிபதியின் இந்திய சுற்றுப் பயணத்தின் பலனாக இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை ...
பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது - இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை ஜனா...
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு - இலங்கை மனித உரிமைகள் ஆ...