ஜனாதிபதியின் இந்திய சுற்றுப் பயணத்தின் பலனாக இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – .சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, August 20th, 2023

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அதனால் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தர ஆரம்பித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதியின் இந்திய சுற்றுப் பயணத்தின் பலனாக இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். மூன்றாவது பெரிய எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தருகின்றனர். அனைத்து விமான சேவை நிறுவனங்களும் இலங்கைக்கான விமான சேவைகளை  ஆரம்பிக்கவுள்ளன. கட்டார் ஏயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு நாளாந்தம் ஆறு விமான சேவைகளை முன்னெடுக்கிறது.   

துருக்கி விமான சேவையும் இலங்கைக்கு விமான பயணங்களை மேற்கொள்வதோடு,  சிங்கப்பூர் விமான சேவை வாரத்தில் ஏழு நாட்களும் நாட்டுக்கு விமானப் சேவையை முன்னெடுக்கிறது.  இஸ்ரேல் அகீரே விமான சேவை ஒக்டோபர் 31 ஆம் திகதியிலிருந்து  வாரத்திற்கு இரு முறை இலங்கைக்காள நேரடி விமான சேவயை முன்னெடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.  மேலும் பல விமான சேவைகளை அதிகரித்த எதிர்பார்த்துள்ளோம். இலங்கையிலிருந்து 80 விமான சேவைகள் வாராந்தம் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன.   

இன்று சுற்றுலாத்துறையில் எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றுபட்டமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஹில்டன் ஹோட்டல் குழுமம் நுவரெலியாவிலும் நீர்கொழும்பிலும் அதி சொகுசு ஹோட்டல்களை விரைவில் திறக்கவுள்ளது. அதனால் இந்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும்.   

பல வருடங்களாக சுற்றுலாத்துறை குறித்து இலங்கையில் மேற்படி புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.  ஜனாதிபதி பல புதிய  திட்டங்களை  அறவித்துள்ளார்.  அதனூடாக தற்காத்தில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ள முடியும்.

இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 31 சதவீதமானவர்கள் மீண்டும் மீண்டும் வருகை தருபவர்கள் என புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு இறுதி இலக்கான நாடாக அமைய வேண்டியதில்லை. ஆனால், உயர்ந்த நட்புறவும் விருந்தோம்பலும் கிடைக்கும் நாடாக இருக்க வேண்டும். இலங்கையில் தங்குவதற்கான விருப்பத்தினாலேயே முதலீட்டாளர்கள் பலரும் இங்கு முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். எனவே இலங்கையில் கிடைக்கும் உயர் விருந்தோம்பலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் மேற்படி வேலைத்திட்டங்களின் பலனாக இந்நாட்டின் சுற்றுலா வியாபாரத்தில் வெற்றியை ஈட்டிக்கொள்ளும் அதேநேரம்  முன்னணி வருமானம் ஈட்டும் துறையாக சுற்றுலாத்துறையை மாற்றியமைக்க முடியும் என்று  சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000.

Related posts:


ஒன்று கூடினால் விளைவுகள் பாரதூரமான விழைவுகள் ஏற்படும் – ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறை எச்சரிக்கை!
அதிவேகம் - கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம் – வட்டுக்கோட்டை செட்டியார் மடத்தில்...
காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பாரிய தாக்கம் - கொழும்பு பல்கலைக்கழ...