போராட்டத்தில் ஈடுபடுவோர் எதிர்காலத்திலும் கைது செய்யப்படுவர் – பொலிஸார் விசேட அறிவிப்பு!
Tuesday, April 5th, 2022
வன்முறை மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எதிர்வரும் காலங்களிலும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்த பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைதியான முறையில் எவரேனும் போராட்டம் நடத்தலாம், எனினும் அது கலவரம் மற்றும் வன்முறையாக மாறினால் கலவரம் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கலவரம் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


