மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது புதிய நடைமுறை!

Friday, May 17th, 2019

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது புதிய சட்டதிட்டங்களை அமுல்படுத்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

முன்னர் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டிகளை புதிய உரிமையாளரின் பெயருக்கு பதிவு செய்யும்போது அதனை விற்பனை செய்கின்றவர் வருவது கட்டாயமாக இருக்கவில்லை. அதற்காக விற்பனையாளர் குறித்த மோட்டார் வண்டியை வழங்குவதற்கான அறிவிப்பொன்றை வழங்க வேண்டியிருந்தது.

எனினும் எதிர்வரும் காலங்களில், பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டியை பதிவு செய்யும் போது விற்பனையாளரும் கொள்வனவாளரும் கட்டாயம் வருகை தரவேண்டுமென மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகட் ஷந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: