போராட்டங்களினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – எதற்கும் தயார் என பெரமுன அறிவிப்பு!
Thursday, March 16th, 2023
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது, சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் தமக்கான கொடுப்பனவுகள் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும், வரி விதிக்க கூடாது என்று சுயநலமான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் பணி புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை, பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
ரணில் விக்ரமசிங்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பொருளாதார மீட்சிக்காகவே புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டடமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


