போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்கிய பாடசாலை மாணவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

Friday, February 8th, 2019

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் தகவல் வழங்கிய மாணவனுக்கு அடுத்த சில வாரங்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியிருந்தார். இதையடுத்து மர்மக் கும்பலொன்று அவரைத் தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனித உரிமைகள் ஆணைக்குழு, மாணவனுக்குப் பாதுகாப்பை வழங்கத் தவறிய பொலிஸாரை கடுமையாகக் கண்டித்தது. இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் தாம் அவதானமாக இருப்போம் என்றும் எச்சரித்தது. மாணவனுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டுமென்று இன்னும் பல தரப்புக்களிடம் இருந்தும் அழுத்தங்கள் குவிந்தன. இதையடுத்து குறித்த மாணவனுக்கு அடுத்த சில வாரங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த பாடசாலை மாணவன் கல்வி கற்கும்  கோணாவில் பாடசாலைக்கு அடுத்த சில வாரங்களுக்கு பாடசாலை ஆரம்பிக்கும்போதும் நிறைவடையும் போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அத்துடன் மாணவனின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: