போக்குவரத்து சபைக்கு 1250 புதிய பஸ்கள் கொள்வனவு!
Wednesday, December 7th, 2016
எதிர்வரும் 2017ம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபை ஆயிரத்து 250 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகசபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கொழும்பு பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
நீண்ட பெரிய ஆயிரம் பஸ்களும் சிறிய இருநூற்று ஐம்பது பஸ்களும் கொள்வனவு செய்யப்பட உள்ளது.பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பஸ்களை கொள்வனவு செய்வது குறித்து பகிரங்க விலை மனுக் கோரல் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் கைதிகள் என்னிடம் ஒரு தடவையேனும் கூறவி...
இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜ...
|
|
|


