போக்குவரத்துச் சட்டங்கள் வடமராட்சியில் இறுக்கம்  – பொலிஸார் அறிவிப்பு!

Saturday, January 28th, 2017

வடமராட்சிப் பிரதேசத்தில் சாலைப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் தனியர் பேருந்துகள் தரிப்பிடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற முடியம் என்று வடமராட்சிக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியகட்சர் றஞ்சித் மாசிங்க அறிவுறுத்தல் வழங்கினார்.

சாலைப் போக்குவரத்து தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியகட்சர் றஞ்சித் மாசிங்க தலைமையில் இந்தக் கல்துரையாடல் நடைபெற்றது. வடமராட்சி பிரதேசத்திற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தரிப்பிடங்களில் மாத்திரமே பயணிகளை ஏற்ற வேண்டும் தரிப்பிடங்கள் இல்லாத இடங்களில் பேருந்துகளை நிறுத்த முடியாது என்று இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பொருத்தமான இடங்களில் பேருந்துத் தரிப்பிடங்கள் அமைக்கப்படும். பாதசாரி கடவைகள் ஒழுங்கு விதிமுறைகiளுக்கு அமைய அமைக்கப்படும். குன்றும் குழியுமாக உள்ள சாலைகளை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க உரிய திணைக்களங்களுக்கு அறிவித்தல் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் வடமராட்சிப் பிரதேசத்தில் சாலைப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

traffic-plan

Related posts: