கொரோனா வைரஸ் தொற்று: அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!

Saturday, April 4th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையின் கீழ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவை நிறைவேற்று பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜயலத் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் பரிசோதனைகளின் மூலம் மாத்திரமே தொற்றாளர்களை அடையாளம் காண முடியும். இதனடிப்படையி;ல் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இன்றி சமூகத்தில் கொவிட் தொற்றாளர்கள் நடமாட கூடும்.

இதுவரையில் இலங்கையில் பரிசோதனை நடாத்தும் வீதம் குறைவாகவே உள்ளது. பரிசோதனைகளை அதிகரிப்பதன் ஊடாகவே இதனை கட்டுபடுத்த முடியும் என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை மருத்து அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜயலத் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts:


எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கத் தீர்மானம் – ஜனாதிபதி கோட்...
அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம...