போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பேருந்துகள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமனம் – தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவிப்பு!

Monday, November 16th, 2020

அரசாங்கத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பேருந்துகள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பேருந்துகளின் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், டிக்கெட் வழங்காத பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்து அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இது போன்ற தவறுகளைக் கண்டவுடன் 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குறித்த பேருந்து இலக்கங்களைக் குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் செய்ய முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: