அபிவிருத்திக்கு வடமாகாகண சபை முட்டுக்கட்டை!

Monday, April 11th, 2016

அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வடமாகாகண சபை முட்டுக்கட்டையாக உள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் குற்றம்சுமத்தியுள்ளார்.

தமது தேவைகள் தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ்மக்கள் மாகாணசபையை தெரிவு செய்துள்ள நிலையில் மக்களது நியாயபூர்வமான அடிப்படை தேவைகள் குறித்து செயலளவில் ஒன்றுமில்லாது பேச்சளவில் மட்டும் நாடகமாடிக்கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் கடிதம் ஒன்றை அமைச்சர் சுவாமிநாதனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சுவாமிநாதனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தினருக்கு அனுகூலமளிக்கும் வகையில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை முழுமையாக நிராகரிக்க வடமாகாகண சபை ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளதாக முதலமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுற்ற பின்னர் வடமாகாண சபையால் உருப்படியான எதுவும் செய்யப்படவில்லை என சுாவமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக கூறப்படும் பணம் அங்கு வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம் மீன்பிடி மற்றும் தொழில்துறை பொருளாதார செயற்பாடுகள் என்பவற்றில் அபிவிருத்திக்கான தேவை இருந்தும் அந்தப்பணம் செலவழிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Related posts: