பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020

பொலிஸ் நிலையங்களினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பொது முறைப்பாடு தொடர்பில் மேற்கொளளப்படும் விசாரணைகளை மேலும் செயல்திறனும் மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்ணான்டோ –

அரசியலமைப்புச் திருத்தம் மிகவும் முக்கியமான திருத்தமாக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அமைந்துள்ளது.

ஆணைக்குழுவிடம் இருந்த பொலிஸ் பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் பொலிஸ்மா அதிபருக்கு மற்றும் பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் முறைப்பாடுகளை முறையாக விசாரணை செய்து உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதே தற்போது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: