பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு!
Monday, May 14th, 2018
இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபர் பின்பற்றாது புறக்கணித்து வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசியலமைப்புச் சபைக்கும் முறைப்பாடு செய்ய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் பல பொலிஸ் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமனம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவியதாகவும் கூறப்படுகின்றது.
Related posts:
மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே வடக்கில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் - வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்...
சுயநிதிப் பொறிமுறையின் கீழ் நகர மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொருமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மைகளை அதிகரிக்க நடவடிக்கை - பிரதமர் தினேஷ் குணவ...
|
|
|


