மீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, April 21st, 2018

வருடத்தின் காலாண்டு காலப்பகுதியில் 15 ஆயிரத்து 578 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் பருவகால நோய்கள் தொடர்பான பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரியில் 4 ஆயிரத்து 390 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 3 ஆயிரத்து 264 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 946 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 31 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

3 தினங்களுக்கு அதிகமான காலம் காய்ச்சல் நீடிக்குமாயின் மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் பருவ நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: