குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மைகளை அதிகரிக்க நடவடிக்கை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, November 2nd, 2023

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண செயலகத்தில் நடைபெற்ற “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான அனுராதபுர விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பள உயர்வை கோரும் நிலையில் அடுத்த ஆண்டு   வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் உயர்த்தப்படவுள்ள சம்பள விகிதங்களைத் தீர்மானிப்பதற்கான “விரிவான பகுப்பாய்வு” தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

000

Related posts:

வேலணை பிரதேசம் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் - வேலணை பிரதேச சபை தவி...
வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீப...
புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு - அமைச்...