பொலிஸ் நிலையங்களில் நடமாடும் மருத்துவ சேவை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொலைதூரக் கிராம மக்களின் நலனை கருத்திற் கொண்டு அந்த கிராமத்திற்கு பொறுப்பான சகல பொலிஸ் நிலையங்களிலும் நடமாடும் வைத்திய சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜே. ஜாகொட ஆராச்சி பணித்துள்ளார்.
தொலைதூரக் கிராம மக்கள் வைத்திய சேவையை பெற்றுக்கொள்வதாக இருந்தால் நகர்புறத்திற்கு வர வேண்டி உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து, பொருளாதாரம், களைப்பு உட்பட பல அசௌகரியங்களை அவர்கள் எதிர்நோக்கின்றனர். அதனால் அந்தந்தக் கிராமங்களை உள்ளடக்கும் பொலிஸ் நிலையங்களில் வைத்திய முகாம்களை நடாத்துமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது!
இயற்கை உரப்பாவனையை மேம்படுத்தும் ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பு –...
வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது –வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க ...
|
|