இயற்கை உரப்பாவனையை மேம்படுத்தும் ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021

வன்னி மாவட்டத்தில் இயற்கை உரப் பாவனையை மேம்படுத்துவதுடன் இரசாயன உரப் பாவனையை நிறுத்துவது தொடர்பான ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் குறித்த விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வன்னி மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் நாபடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்க்கான PCR இயந்திரதத்தின் அவசியம் தொடர்பில் இதனால் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலன் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கிராமசேவையாளர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததுடன்  கொரோனா தொற்றாலோ அல்லது வேறு நோய்களால் ஒருவர் வீட்டிலே இறந்தால் அவரது உடலை கொண்டு செல்வதில் பாரிய தாமதம் ஏற்படுவதால் அதனை நிவர்த்தி செய்யவதற்கு வாகன ஒழுங்குகள் செய்யப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 5000 ரூபா கொடுப்பனவில் முதற்கட்டத்தில் வவுனியா பிரதேசச் செயலகத்தில் 4 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர்களுக்கு அந்த நிதியை வழங்க ஏற்பாடு செசய்யவேண்டும் என்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றதாகவும் தெரிவித்துள்ள திலீபன் அப்பாவி மக்களுக்கு இடர்காலத்தில் கிடைக்கின்ற இந்த 5000 ரூபாவை லீசிங் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிப்பது நிறுத்தப்படவேண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: