பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு – வடக்கில் ஆரம்ப பயிற்சி முகாம்!

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதுவரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்தது. ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
3 ஆம் தவணைப் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பம்!
மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!
கடல் உயிரின பண்ணைகளின் பாதுகாப்பை முன்நிறுத்தி காவலரண்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின்...
|
|