பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்றுமுதல் ,உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு!
Tuesday, February 13th, 2024
இந்த ஆண்டுக்கான பாதீட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான, அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு இன்றுமுதல் வழங்கப்படவுள்ளது.
அதன்படி, இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவுக்கு மேலதிகமாக பாதீட்டின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் அரைவாசி வழங்கப்படவுள்ளது.
கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 17,000 ரூபாய் கொடுப்பனவு பாதீட்டின் மூலம் 11,800 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட குறித்த தொகையில் 50 சதவீதத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச ஊழியர்களுக்கு மற்றுமொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி!
ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது - அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப...
மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்...
|
|
|


