பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டு – விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல்!

கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான குருநாகல் பகுதியை சேர்ந்த ஆர்.எம்.டி.கே தர்மிக்க ரத்நாயக்கா (வயது-34) மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஏ.கே சுரேந்திரன் (வயது-26) ஆகிய இருவர் மீதும் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(30) பட்டப்பகலில் பத்துப் பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் யாழின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!
போக்குவரத்துச் சேவையை இலகுபடுத்திய டக்ளஸ் தேவானந்தாவுக்கு நயினை பக்தர்கள் நன்றி தெரிவிப்பு!
சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நூறு சேவைகளை நிறைவு செய்தது அலையன்ஸ் எயார் விமானம்!
|
|
வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை - காங்கேசன்துறை துறைமுகத்தில் நீண்டகாலமாக தரித்துள்ளது என தெரிவ...
நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது - எரிபொருள் - எரிவாயுவுக்கு அவசியமான டொல...
அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் - பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத த...