பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி ஆரம்பம்!
Sunday, July 12th, 2020
யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து யாழ்ப்பாணம் மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் பணி இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் காணப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுப்பொருள்களை அகற்றி நகரைச் சுத்தப்படுத்தும் நோக்குடன் இந்தப் பணி சுழற்சிமுறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இன்று ஆரம்பமானது தேசிய உணவு பாதுகாப்பு வாரம்!
மூன்று மாதத்தில் 91 பேர் எச். ஐ. வி யினால் பாதிப்பு!
நாளை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்!
|
|
|


