இன்று ஆரம்பமானது தேசிய உணவு பாதுகாப்பு வாரம்!

Monday, August 22nd, 2016

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதன் நிமித்தம் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சிற்றுண்டி சாலைகள் உணவகங்கள் வெதுப்பகங்கள் உணவு விடுதிகள் மற்றும் நெடுந்துர பேருந்து சேவைகளின் போது தேநீர் போசனத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்படும் இடங்கள் என்பன சுற்றிவளைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையினரும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒன்றிணைந்து செயற்படவுள்ளனர். மேலும் மென்பான உற்பத்திகள் சட்ட ரீதியாக மெற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பிலும் இதன்போது பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சட்டங்களை மீறும் வியாபாரிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கு, எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

Related posts:

ஊர்காவற்துறையில் 18 வயது யுவதிக்கு மயக்கமருந்து தூவி வன்புணர்வு முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்...
மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை - வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை...
அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன...