பொலித்தீன் தொழிற்சாலைகளில் சோதனை – மத்திய சுற்றாடல் அதிகாரசபை!

பொலித்தீன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அடுத்த மாதத்திலிருந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த உற்பத்திகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பாக கவனிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் பதிவு செய்து கொள்ளாமல் 500 பொலித்தீன் உற்பத்தியாளர்கள் உள்நாட்டு வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், அவர்களை தமக்கு கீழ் பதிவு செய்து கொள்ளுமாறும் அவர்அழைப்பு விடுத்துள்ளார்.
Related posts:
நிஷா பிஸ்வால் இன்று இலங்கை வருகை!
மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு!
|
|