இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, September 22nd, 2021

2021 செப்டம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது.

உதவி ஆளுநர் ஜே பி ஆர் கருணாரத்ன அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக முதுமானிப் பட்டத்தினையும் கொழும்புப் பல்கலைக் கழகத்திலிருந்து பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் - ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட அமைப்பானர் புஸ்பராசா தெரிவிப்பு...
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்க...
முழுங்காவில் கதிராவில் குளத்தால் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த அமைச்சர் டக்ளஸின் இணைப்பாளர் தவநாதன...