பொலித்தீன் தடை – இலங்கையில் நெருக்கடி!

தரமற்ற பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை காரணமாக இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
பொலித்தீன் உற்பத்திகள் உரிய தராதரங்களுக்கு அமைய பயன்படுத்தப்படாததன் காரணமாக பெரும் சுற்றாடல் நெருக்கடிகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 மைக்ரோனை விட தடிப்புக்குறைந்த பொலித்தீனை தடைசெய்து அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று முறையற்ற பொலித்தீன் பாவனை இடம்பெறுவதாக விவசாய ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!
முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் – இதுவே விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்ப...
|
|