பொலிசாரால் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட மாட்டாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
Sunday, August 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸாரின் ஊடாக ஊரடங்கு அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படமாட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்கள் தங்களது அடையாள அட்டை அல்லது நிறுவன பிரதானிகளால் வழங்கப்படும் கடிதங்களை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்ற பொலிஸாரிடம் காண்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
புதிய அறிகுறிகளோடு சிறுவர்களை தாக்கும் கொரோனா – எச்சரிக்கை விடுக்கும் பிரித்தானியா!
பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி - பொலிஸ் மா அதிபர்!
இ.போ.ச ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவாக 2,508 மில்லியன் ரூபா - தேசிய கணக...
|
|
|


