பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்கை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்!
Saturday, September 19th, 2020
இலங்கை பல்கலைக் கழகங்களின் பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் உள்ள 6 பொறியியல் பீடங்களுக்குமாக மேலும் 405 மாணவர்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதான பொறியியல் பீடங்கள் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களான பேராதனை, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், ருகுணு, மொரட்டுவ மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கே இவ்வாறு மாணவர்களை அதிகரிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் தயாரிப்பான பல்சிகிச்சை நாற்காலியை கொள்வனவு செய்வதில் சுகாதார அமைச்சு ஆர்வம்!
எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் - அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர...
13 - 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


