பொறியியலாளர் சேவைக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல்!

Sunday, September 3rd, 2017

இலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு கோரியுள்ளது.

நாடு முழுவதும் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்களில் இலங்கை பொறியியலாளர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த சிவில் பொறிமுறை புகையிரத திணைக்களத்தின் மின் மற்றும் மின் பொறியியல் ஆகிய துறைகளில் காணப்படும் 229 வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவே இப்போட்டிப் பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

விண்ணப்ப இறுதித் திகதி 25.09.2017 ஆகும்.சிவில் துறையில் 162பேருக்கும் பொறிமுறை துறையில் 15பேருக்கும் மின் துறையில் 09பேருக்கும் பௌதீக வளங்கள் துறையில் 42 பேருக்கும் இரசாயனத்துறையில் ஒருவருக்குமாக இவ்வெற்றிடங்கள் நிலவுகின்றன.இதற்கு 21-35 வயதுக்குட்பட்ட தொழில்சார் தகைமை பெற்ற பொறியியலாளர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

சம்பள அளவுத்திட்டம் 47615 ருபா முதல் 110895ருபா வரையாகும்.விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடமாயின் திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வினடிப்படையில் தெரிவு இடம்பெறும்.

குறையுமாயின் பரீட்சையின்றி நேரடியாக நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தெரிவு இடம்பெறும் என பொதுநிருவாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளார்.மேலதிக விபரங்களுக்கு 31.08.2017 அரச வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்கவும்

Related posts: