பொருளாதார நெருக்கடி – தொழில் பெறும் நோக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் என்ணிக்கை அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல்!

Monday, October 10th, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இதன்படி இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 8 ஆம் திகதிவரை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 330,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதே பணியகத்தின் இலக்காகும். இந் நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும்.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டு அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், அந்த எண்ணிக்கை 300,703 ஆகவும் இருந்தது. 2016 முதல், வெளிநாட்டு வேலைகளுக்கான செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில் 2020 இல், கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, குறித்த எண்ணிக்கை 53,711 ஆக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: